Vijay Prays at Church in Trichy During Campaign
விஜய்Pt web

திருச்சியில் விஜய் பரப்புரை.. அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை!

பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ள தவெக தலைவர் விஜய் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்துள்ளார்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே, தவெக பரப்புரைக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது என அக்கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், பரப்புரைக்கு அனுமதி கிடைத்த பிறகு, பல இடங்களில் பரப்புரை ரத்தானது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்
விஜய்Pt web

தமிழக தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் நிறவடையவிருக்கும் இந்த சூழலில் தான், நேற்று தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபடவில்லை. தொடர்ந்து, இன்று திருச்சி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று மாலை 3 மணியளவில், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து பரப்புரை வாகனத்தில் சாலைவலத்தில் ஈடுபாட்டார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்டு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சாலைவலத்தின் போது, திடீரென அருகில் இருந்த அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்ற அவர், மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். திருச்சியில் இன்று இரவு 8 மணி வரை பரப்புரையில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vijay Prays at Church in Trichy During Campaign
”பிரகாஷ் ராஜ், சத்யராஜ் இருவரும் கூத்தாடிகள் தானே” - குஷ்பு கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com