விஜய்
விஜய்Pt web

”பாஜக காலில் திமுக விழும்; 10 முறை தோற்ற சேலத்துக்காரர்” - விஜயின் அனல்பறந்த இறுதி பரப்புரை!

என்னை நடிகரென்று கூறுகிறார்கள். ஆம், நான் நடிகன் தான்; ஆனால், அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் இறுதி பரப்புரையில் விஜய், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். விலைவாசி உயர்வு, தண்ணீர், வீட்டு, தொழில் வரி, குப்பை வரி வரை உயர்த்தியதாக குற்றம்சாட்டி, மக்களின் கஷ்டங்களை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் உயர்த்தியதாக கூறினார். மதச்சார்பற்ற சமூகநீதியே தன் கொள்கை என வலியுறுத்தி, விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பரப்புரைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தவெகவின் தலைவர் விஜய் இன்று சென்னையில் சாலை வலம் மேற்கொண்ட நிலையில், மாலை 3 மணிக்கு நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கான இறுதி உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

விஜய்
விஜய்Pt web

ஏற்கனவே, பல்வேறு பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டது குறித்தும், விஜயின் பரப்புரை திட்டம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தான், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரப்புரை மற்றும் சாலைவலத்தில் ஈடுபட்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

நேற்றைய முன்தினம் திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், நேற்று திருவள்ளூர் மற்றும் சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து, இன்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் பரப்புரை மேற்கொள்வார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜய்
”லஞ்சம், கொள்ளை, பணமழை பொழிந்தாலும்.. விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்” - தவெக விஜய் அறிக்கை

அதன்படி, இன்றைய பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசும்போது, ”மிகக் முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசிப் பரப்புரை இது. மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்?” எனப் பேசி தனது பரப்புரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்திருக்கிறது. தண்ணீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. குப்பைக்கு கூட வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, மக்களின் கஷ்டங்களை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் உயர்த்தியிருக்கிறார். விக்கிரவாண்டி மாநாட்டில் நாம் கூறியது போலவே, கொள்கை எதிரி பாஜக என்பதில் இருந்தும், அரசியல் எதிரி திமுக என்று கூறியதில் இருந்தும் 1 இஞ்ச் கூட மாறவில்லை, அதிலிருந்து மாறப்போவதும் இல்லை. மதச்சார்பற்ற சமூக நீதி தான் நமது கொள்கை. இதில் 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம். விஜய் ஒன்று சொன்னால் அதிலிருந்து மாறமாட்டான். ஸ்டாலின் சார் மாதிரி கிடையாது.

ஸ்டாலின், விஜய்
ஸ்டாலின், விஜய்X

சிறுபான்மையினர் வாக்குகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக காங்கிரஸை தனது பைக்குள் போட்டுக்கொண்ட திமுக, ஒரு பக்கம் கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவுடன் மறைமுக டீலிங் வைத்துக் கொண்டுள்ளது. பாஜக திமுகவிடையே மறைமுக கூட்டணி இருக்கிறது என 2 வருடத்துக்கு முன்பே கூறினேன். இது இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட இது கூறியிருக்கிறார். மோடி மற்றும் அமித் ஷா காலில் திமுக விழத் தான் போகிறது. அதுமட்டுமின்றி, பாஜகவின் முதல் அடிமை யார் என்பதில், திமுக, மற்றும் பலர் இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. சிறுபாண்மை சகோதரர்களுடன் எப்போதும் நான் கூடவே இருப்பேன்.

விஜய்
"நான் எப்போதும் டேஞ்சர்தான்" - வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் நடிகன் தான். நான் அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை. எத்தனை கருத்துக்கணிப்பு, கடுப்பில் விட்ட கணிப்புகள் விட்டாலும் திமுகவும், மற்றும்பலரும் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. முதல்வர் ஸ்டாலின் சாரிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றி ஆக வேண்டும். தமிழக மக்களிடம் இருந்து நான் கேட்டுக்கொள்வது தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள்; விஜய்க்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்பது தான்.

விஜய்
விஜய்Pt web

அதேபோல், ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என்று 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார். உங்களால் சேலத்தை தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா?. தோல்வி பயத்தில், நமது சின்னத்தை அவர் திருடியிருக்கிறார். அதனாலேயே, எடப்பாடியில் போட்டியிடும் பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். போகியில் பழையதை தூக்கி எறிவதைப் போல, இத்தேர்தலில் திமுகவையும் அதிமுகவையும் தூக்கியெறிய வேண்டும். திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக வாக்களிப்பது போல எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்
First Point-ல் விஜய் அடித்து விட்டார்.. இந்த முறை சீமானுக்கு கடும் அதிர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com