விஜய் ஆண்டனியின் மகள் மரணம்: திரைப்பிரபலங்கள் இரங்கல்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
vijay antony
vijay antonypt desk

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மனு அழுத்தம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மீரா, நேற்று அவரது தோழியை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை மகளை கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி, பணியாளர் உதவியுடன் உடலை கைப்பற்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

police investigation
police investigationpt desk

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து கீழ்பாக்கம் கல்லறையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

vijay antony
விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம்..!

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் சக தோழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மீரா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீசார், கடைசியாக யார் யாரெல்லாம் அவருடன் பேசியுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

vijay antonys house
vijay antonys housept desk

இந்நிலையில், நடிகை குஷ்பு, சந்தானம், ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட திரை உலகத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com