விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம்..!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார்.
Vijay antony daughter
Vijay antony daughterFile image

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவரின் ரசிகையான ஃபாத்திமாவை காதல் திருமணம் செய்தவர். 16 வயதான விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு மூன்று மணி அளவில் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார் மீரா. பணியாளர்கள் உதவியுடன் மீராவை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com