\
Vellore assembly constituency updates
வேலூர்x page

நட்சத்திர தொகுதி | தக்கவைக்குமா திமுக.. வெல்லுமா அதிமுக? வேலூர் நிலவரம் என்ன?

10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 5 தொகுதிகள் கொண்ட வேலூர் தொகுதியில் எங்கு யாருடைய கை ஓங்கி இருக்கிறது... மக்கள் பிரச்னைகள் என்னென்ன? கள நிலவரத்தை காணலாம்.
Published on

வீரம் விளைந்த வேலூர் கோட்டை, இந்தியாவிற்கே தேசியக் கொடி தந்த குடியாத்தம் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட வேலூர் மாவட்டம், தேர்தலுக்காக இப்போதே தயாராகிவிட்டது.

சிப்பாய் புரட்சி நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மற்றும் உலகப்புகழ் பெற்ற சி.எம்.சி மருத்துவமனை அமைந்துள்ள தொகுதி வேலூர். இத்தொகுதி கடந்த இரண்டு முறையும் திமுக வசமே உள்ளது. முதலியார் மற்றும் சிறுபான்மையின வாக்குகளே இங்கு வெற்றியைத் தீர்மானிக்கின்றன. தற்போது திமுகவின் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தமிழகத்தின் முக்கிய ரயில்வே சந்திப்பான காட்பாடி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு 10 முறை போட்டியிட்டு 8 முறை வென்றுள்ள அவர், கடந்த 2021 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்றுள்ள அவர், இந்த முறையும் போட்டியிடுகிறார். மலைக்கிராமங்களின் அடிப்படைத் தேவை தங்கக்கோயில் அமைந்துள்ள அணைக்கட்டு தொகுதியில் வன்னியர் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

Vellore assembly constituency updates
துரைமுருகன் x page

தற்போது திமுகவின் ஏ.பி.நந்தகுமார் வசமுள்ள இத்தொகுதியில், 60-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு இன்னும் முறையான சாலை வசதி இல்லை. வாசனைத் திரவிய தொழிற்சாலை மற்றும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் பல ஆண்டுகாலக் கோரிக்க 1954-இல் காமராஜர் சட்டமன்ற உறுப்பினரான பெருமைக்குரிய தொகுதி குடியாத்தம். தற்போது திமுகவின் வி.அமுலு எம்.எல்.ஏ-வாக உள்ளார். இங்கு ஜி.எஸ்.டி சுமை மற்றும் மூலப்பொருள் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்து வருகிறது. அதிமுகவின் பலமான தளம் முழுக்கமுழுக்க கிராம ஊராட்சிகளைக் கொண்ட கே.வி.குப்பம் தனித்தொகுதியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ-வாக உள்ளார். தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் மற்றும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைப்பதே இங்குள்ள விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ள வேலூர் மாவட்டத்தில், வெற்றிக் கனியைப் பறிக்கப்போவது யார்? திமுக தனது பிடியைத் தக்கவைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் கோட்டையைக் கைப்பற்றுமா? தேர்தல் திருவிழா முடிய காத்திருப்போம்...

Vellore assembly constituency updates
துரைமுருகன் பொறுப்பை கைமாற்றும் திமுக? கையிலெடுக்கும் முக்கிய நிர்வாகி.. பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com