Rescued
Rescuedpt desk

வேலூர்: குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாய் உட்பட 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

நீச்சல் பழகிய 2 குழந்தைகளுடன் தாயும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30) தம்பதியர். இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பிள்ளைகள் வீட்டில் இருந்ததால், பவித்ரா, தினமும் தனது பிள்ளைகளை அருகில் உளள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Rescued
கரூர்: வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்களின் நகைகளை திருட முயன்ற மர்ம நபர்! அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில், இன்று காலை பவித்ரா, தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர், ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com