CCTV footagept desk
தமிழ்நாடு
கரூர்: வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்களின் நகைகளை திருட முயன்ற மர்ம நபர்! அதிர்ச்சி வீடியோ
கரூர் அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரிடம் மர்ம நபர் திருட முயற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: எஸ் சந்திரன்
கரூர் அருகே வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். தற்போது கடும் வெப்பம் நிலவுதால் தனது குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில், மேலாடையின்றி முகத்தை மூடி கொண்டு வந்த மர்ம நபர், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது டார்ச் லைட் அடித்து நகையை திருட முயன்றுள்ளார்.
CCTV footagept desk
அப்போது திடீரென்று சத்தம் கேட்கவே அங்கிருந்து மெதுவாக தப்பித்துச் சென்றுள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊத்தங்கரை: 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்..தொண்டையில் சிக்கியதால் விபரீதம்..அகற்றிய மருத்துவர்!
கடந்த சில மாதங்களாக இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மீண்டும் இதே போல் நடந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.