நகை திருட்டுpt desk
தமிழ்நாடு
வேலூர் | திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழில் செய்து வரும் ராஜேஷ். இவர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து இன்று வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 20 சவரன் தங்க நகை மற்றும் சில வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.