மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆக. 13ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீர்காழி இணைந்து நடத்திய ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சியை, அம்மாவட்ட ஆட்சியர் A.P.மகாபாரதி IAS மற்றும் பள்ளித் தாளாளர் கே.வி. ராதா கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், 300க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கட்சிப்படுத்தப்பட்டன. மலைப்பகுதியில் விபத்தை தடுப்பது, மண்ணில்லாமல் விவசாயம் செய்வது, மழை நீர் சேகரிப்பின் அவசியம் உள்ளிட்டவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜூனியர் பிரிவில் டி.ஆர்.எம்.சி.டி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மஹதி முதல் பரிசினை தட்டிச் சென்றார். நினைவுக்கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சீனியர் பிரிவில் குரு ஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தனஞ்ஜெய் மற்றும் நித்திஸ்வர் முதல் பரிசினை தட்டிச் சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவுக்கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) நிர்மலா ராணி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.