திருமா  - அண்ணாமலை
திருமா - அண்ணாமலைமுகநூல்

“அநாகரிகமான அரசியல்...” ஆனந்த் டெல்டும்டே குறித்தான அண்ணாமலையின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி!

இதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், ஆனந்த் டெல்டும்டேவை தீவிரவாதி என முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிகமான அரசியல் என்று அண்ணாமலைக்கு பதிலடிக்கொடுத்துள்ளார்.
Published on

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ‘ஆனந்த் டெல்டும்டேவை தமிழக மக்களுக்கு யாரென்றே தெரியாது. உண்மையில் அவர் ஒரு அர்பன் நக்சல். 2021ல் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 22 நக்சல்ஸ்களில், ஆனந்த்தின் தம்பி மில்லின் டெல்டும்டேவும் ஒருவர்’ என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “ஆனந்த் டெல்டும்டேவிற்கு தீவிரவாதி என முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிகமான அரசியல்” என்றுள்ளார்.

மேலும், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவிக்கையில், ”ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதனால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய உடன்பிறப்பு ஒருவர் தலைமறைவாகி இருக்கிறார் என்கிற சந்தேகத்தின் பெயரில் அவரைப் பிடித்துச் சென்றது என்.ஐ.ஏ. அவ்வளவுதான்.

அவர் வெளிப்படையாக பல துறைகளில் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பேராசிரியர். ஆனால், இடதுசாரி சிந்தனையாளர். புரட்சியாளர் அம்பேத்கருடைய பேத்தியின் கணவர். பிரகாஷ் அம்பேத்கருடைய தங்கையின் கணவர். அவர் நீதிமன்ற அனுமதியோடுதான் தமிழ்நாட்டுக்கு வந்தார். சட்டபூர்வமாகத்தான் அனுமதி பெற்றிருக்கிறார்.

திருமா  - அண்ணாமலை
"மன்னராட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார்?"- அண்ணாமலை காட்டம்!

அவரை மராட்டிய மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் அழைக்கிறார்கள். அவரை மேலும் தீவிரவாத முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிகமான அரசியல். பாஜக இது போன்ற அரசியலை தமிழ்நாட்டுக்கு வடக்கே வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர , தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதவ் அர்ஜுனனை குறித்து தெரிவித்த அவர், ”ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து என்னிடத்தில் கேட்டார். ‘நீங்கள் பங்கேற்காதபோது நான் பங்கேற்கலாமா?’ என்று என்னிடத்தில் கேட்டார்.

‘அதை உருவாக்கியதே நீங்கள் என்கிறபோது அதை தவிர்க்க வேண்டாம்; கலந்து கொள்ளுங்கள்’ என்றும், ‘அதே நேரத்தில் கவனமாக பேசுங்கள்’ என்றும் கூறியிருந்தேன். ஆகவே என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் போகவில்லை. அவரைப் போக வேண்டாம் என்று நான் சொல்லுவது ஜனநாயகம் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எளிய மக்களை அமைப்பாக்கி வருகிற ஒரு கட்சி. இதில் இத்தனை காலமும் நாங்கள் ஜனநாயகப் பூர்வமாகத்தான் எல்லா முடிவுகளையும் எடுத்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டு. ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் ஒரு பின்னணி உண்டு. மற்ற கட்சிகளைப் போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடக்கத்தில் ஒரு தலித் இயக்கம் என்கிற அடையாத்தோடு பொதுப்பணியில் ஈடுபட்டது. அரசியல் இயக்கமாக மாற நாங்கள் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளுள் ஒன்று ‘இந்த இயக்கத்தில் தலித் அல்லாதவர்கள் ஜனநாயக சக்திகள் வந்து சேரலாம்’ என்பது. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பாருக்கும் இந்த கட்சியிலே முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடம் உண்டு என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றினோம். அதை நாங்கள் வேளச்சேரி தீர்மானம் என்று அழைக்கிறோம்.

திருமா  - அண்ணாமலை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

அதிலிருந்து இந்த இயக்கத்தில் ஏராளமான ஜனநாயக சக்திகளாக இருக்கிற தலித் அல்லாதவர்கள் இந்த இயக்கத்திலே தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வரிசையிலே ஆதவ் அர்ஜுன் அவர்களும் ஒருவர். எங்கள் கட்சியிலே துணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்பு 10 பேருக்கு வழங்க வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு.. அதிலே தலித் அல்லாதவர்களும் உண்டு.

தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருந்தால் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவிலே கலந்தாய்வு செய்து அவர்கள் மீதான நடவடிக்கையை ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்துதான் எடுப்போம். இதை நாங்கள் ஒரு நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் தலித் அல்லாதவர்கள் கட்சிக்குள்ளே வருகிறபோது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டியது தலைமையின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com