\
VCK Chief Thiruma Responds in Can DMK Win Alone
திருமாவளவன் - ஸ்டாலின்web

விலகும் கட்சிகள்.. ”திமுக தனித்துப் போட்டியிட்டால் வெல்லுமா?” - திருமா நச் பதில்!

திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
Published on: 

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. இதில் தோல்வியைத் தழுவிய திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதேநேரத்தில் தனித்து வளர்ந்த தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தவிர, அக்கட்சிகளில் சில திமுக கூட்டணியில் பிரிந்து தவெக பக்கம் சென்றுவிட்டது. இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்பி ஆ.ராசா, “இனிமேல் யாருடனும் திமுக கூட்டணி இல்லை; 'இனி தனித்து நின்று வெற்றிபெறும்' என அறிவியுங்கள்; 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தலைவரே.." என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்PT WEB

அந்த வகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “கூட்டணி இல்லாமல் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்பது தனக்கு தெரியவில்லை. இது திமுகவின் உள்கட்சி விவகாரம். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக சுமார் 60 இடங்களை வென்றதாகவும், கூட்டணி இல்லாமல் திமுக எதிர்காலத்தில் ஆட்சியை நிலைநிறுத்துவது கடினம்” என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், ”1967ஆம் ஆண்டு முதல் கூட்டணிக் கட்சிகளின் துணையோடுதான் திமுக தேர்தலில் வென்றதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரும் விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com