\
Vanni Arasu Announces Special Law Against Honor Killings
அமைச்சர் வன்னி அரசுPt web

”ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம்” - அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!!

ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று சமூகநீதித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூகநீதித்துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகக் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வன்னி அரசு
வன்னி அரசுPt web

இதுகுறித்துப் பேசியுள்ள அவர், வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடமும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்று வருகிறது. ஆனால், காதலித்ததால் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொலை செய்யும் போக்கு நிலவி வருகிறது.

சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் கடந்த திமுக அரசு குழு அமைத்திருந்தது.

இந்த நிலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாட்ஷா குழுவின் பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டவுடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Vanni Arasu Announces Special Law Against Honor Killings
ஒரே நாளில் அனைத்தும் காலி... சரிந்த பரந்தூர் நில மதிப்பு.. வீணான மாதிரி வீடுகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com