திருக்கல்யாண வைபவம்
திருக்கல்யாண வைபவம்pt desk

வாணியம்பாடி | சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் - திரளான சிவ பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான அதிதீஸ்வரர் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் ஆலயத்தில் 111 வது ஆண்டு பிரமேற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆலய மண்டபத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

ஆலய மண்டபத்தில் விநாயகர், முருகர், சரஸ்வதி தேவி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்க, சிவன் பார்வதி திருமணம் வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருக்கல்யாண வைபவம்
அரசுக் கட்டடங்களுக்கு பசுக்களின் சாணம் வண்ணமாகிறது? உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன விஷயம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com