மருத்துவமனை உரிமையாளர் மீது புகார்pt desk
தமிழ்நாடு
வாணியம்பாடி | நர்சிங் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மருத்துவமனை உரிமையாளர் மீது புகார்
வாணியம்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் தனியார் மருத்துவமனை (நிஷா மருத்துவமனை) நடத்தி வருபவர் ஜாவித். இந்த மருத்துவமனைக்கு வாணியம்பாடி பகுதியில் இருந்து பயிற்சிக்காக வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவமனை உரிமையாளர் ஜாவீத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவி புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் மருத்துவமனை உரிமையாளர் ஜாவித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துஈ மாணவிகளிடம் காவல்துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மருத்துவமனை உரிமையார் ஜாவித் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.