வாணியம்பாடி: அரசு மருத்துவமனையில் நுழைந்து உள் நோயாளியை தாக்க முயன்ற மர்ம நபர்கள்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவரை முகக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Patient
Patientpt desk

செய்தியாளர் - ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஜினி குமார். இவர், கோவிந்தராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார், இந்நிலையில் ரஜினி குமார், கோவிந்தராஜிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் கோவிந்தராஜ், நவீன்குமார், மற்றும் வெங்கடேசன் ஆகியோர் ரஜினி குமாரை கடந்த 09.05.2024 அன்று பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்,

ரஜினி குமார்
ரஜினி குமார்

இதில் படுகாயம் அடைந்த ரஜினி குமார் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், புகுந்த சிலர் ரஜினி குமாரை வலுக்கட்டயமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த ரஜினிகுமார் உடனடியாக இச்சம்பவம் குறித்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Patient
கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.. துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்! பிடிபட்ட நடிகரின் கார் ஓட்டுநர்!

காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரஜினி குமாருக்கு மார்பு எலும்பு, உடைந்துள்ளதால் அவரை மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police station
Police stationpt desk

இது குறித்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியிடம் கேட்டபோது... “கடந்த 09.04.2024 அன்று முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் நேற்று இரவு மற்றும் காலையில் வந்துள்ளனர். இது குறித்து ரஜினிகுமார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினருடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளை உறுதி செய்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.

Patient
விருதுநகர்: முதியவரை குடும்பமாக சேர்ந்து அடித்துக் கொலை.. பெண் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com