ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்pt desk

வாணியம்பாடி | கல்லூரி மாணவி தவறவிட்ட பணம்.. காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

வாணியம்பாடியில் கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டு சென்ற பணத்தை தவறவிட்ட கல்லூரி மாணவி. சாலையில் கிடந்த 19,000 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆய்வாளர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம். இவர், கடந்த 17 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், இன்று தொழிற்சாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கிரிசமுத்திரம் பகுதியில் விட்டு விட்டு மீண்டும், தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கிரிசமுத்திரம் பகுதியில் சாலையோரம் விழுந்து கிடந்த பையை மீட்டு அதை சோதனை செய்த போது, அதில், ஏ.டி.எம். கார்டுகள், 19,000 ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது,

இதையடுத்து உடனடியாக அந்த பணத்தை பிரகாசம், வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார், அதனை தொடர்ந்து பிரகாசம் ஒப்படைத்த பணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது, அப்பணம் பாப்பனப்பல்லி பகுதியைச் சேர்ந்த நிரோஷா என்ற பெண்ணுடையது என்பதும், அவர் தனது மகள் சுஷ்மிதாவிற்கு கல்லூரி கட்டணம் செலுத்த தங்கநகையை அடகு வைத்து, 19,000 ரூபாய் பணத்தை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தவறவிட்டது தெரியவந்துள்ளது,

ஆட்டோ ஓட்டுநர்
வேலூர் | ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது

இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர், நிரோஷாவிடம் விசாரணை செய்து தவற விட்ட பணம் அவருடையது தான் என உறுதியானதை தொடர்ந்து பணத்தை காவல் ஆய்வாளர் நிரோஷாவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷை சால்வை அணிவித்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com