வேலூர் | ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) வைத்து நடத்தி வருபவர் ரசாக் (28). இவரிடம் வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் தொலைபேசி மூலமாகவும்இ நேரடியாக வழிமறித்தும் சுமார் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் உயிரோடு நடமாட முடியாது என கொலை மிரட்டலும் விடுத்ததாக ரசாக் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வேலூல் வடக்கு காவல் துறையினர்இ சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து பணம் கேட்டு மிரட்டிய வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா அவரது கூட்டாளிகளான மஞ்சுநாதன்இ வெங்கடேஷ்இ முனீர்இ ஆசிப் ஆகிய 5 பேரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது கைதாகியுள்ள ரவுடி வசூர் ராஜாஇ கடந்த மாதம் தான் ஒரு வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளார். இவர் மீது வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்இ ஜாமீனில் வெளியே வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.