\
வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்pt web

”அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டேன்” - காயத்துடன் போட்டோ வெளியிட்டு வனிதா விஜயகுமார் புகார்!

அடையாளம் தெரியாத நபரால் தாம் தாக்கப்பட்டதாக வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on

நடிகை வனிதா விஜயகுமார் சென்னையில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு செல்ல காரை பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீப்பின் ஆதரவாளர் எனக்கூறி, தம்மை தாக்கியதாக வனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை தாக்கியவர் யார் என்பது என கடவுளுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து புகார் கொடுக்க தனக்கு விருப்பமில்லை எனவும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீப் என்பவரை தொகுப்பாளர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com