\
Vadapalani-Poonamallee Metro Opening Date Announced
Chennai MetroChennai Metro rail

ஒரே மேடையில் பிரதமர் - CM விஜய்! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ திறப்பு! சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ வழிதடத்தின் திறப்பு விழா எப்போது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திறப்பு விழாவில், முதலமைச்சர் விஜய் மற்றும் பிரதமர் நநேரந்திர மோடி ஆகியோர் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Published on: 

சென்னையில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் ஆகிய இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீல வழித்தடம் விம்கோ நகரில் தொடங்கி, சென்னை விமான நிலையம் வரை நீள்கிறது. பச்சை வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை நீள்கிறது. இந்த இரண்டு வழிதடங்களும், தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கியிருந்தது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோANI

இதன் ஒரு பகுதியாக, வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. 14.64 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த வழித்தடம், பாதுகாப்பு ஒப்புதல் பெற்று 7 மாதங்கள் ஆன பிறகும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமலே இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சிக்கு தேதி ஒதுக்காமல் இருந்ததே, திறப்பு விழா நடத்ததாதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்பட்டது. மேலும், செப்டம்பர் மாத இறுதியில் இதற்காக பிரதமர் மோடி நேரம் ஒதுக்குவார் என்றும், எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், வடபழனி - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ வழித்தடத்தின் திறப்பு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vadapalani-Poonamallee Metro Opening Date Announced
2022 டூ 2026 தேர்தல்கள்| வெற்றிக்குப் பிறகு கட்சி மாறிய 111 உறுப்பினர்கள்.. முதலிடத்தில் நாகாலாந்து!

அதன்படி, அக்டோபர் 11-ஆம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தை திறந்து வைக்க உள்ளார். வடபழனியில் தொடங்கி போரூர் சந்திப்பு, போரூர் பைபாஸ், தெள்ளியகரம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைத் தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 11 வழித்தடங்கள் இதில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழித்தடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன், முதலமைச்சர் விஜயும் கலந்துக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vadapalani-Poonamallee Metro Opening Date Announced
ஆடம்பர வாழ்க்கையை ஆன்லைனில் பதிவிட்ட YOUTUBER.. வீடு புகுந்து 118 சவரன் அபேஸ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com