அண்ணன் தங்கை
அண்ணன் தங்கைpt desk

உசிலம்பட்டி: அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுத தங்கையும் உயிரிழந்த சோகம்

உசிலம்பட்டி அருகே அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தங்கையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: பிரேம்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை. உசிலம்பட்டி தாலுகா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

house
housept desk
அண்ணன் தங்கை
சென்னை: உதவிக்குச் சென்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

இவரது இறப்பு செய்தியை அறிந்து அவரது உடலை பார்க்க வந்த (சித்தப்பா மகள்) தங்கை முறையான நக்கலப்பட்டியைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் அண்ணனின் உடலை கட்டி அணைத்து அழுதுள்ளார். அப்போது அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டு காலம் ஒன்றாக இருந்த பாசமிகு அண்ணன் இறந்த உடனே, தங்கையும் அவரது மடியில் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com