சென்னை: உதவிக்குச் சென்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Retired Police SI
Retired Police SIpt desk

செய்தியாளர்: ஆனந்தன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த தனியார் கால் டாக்ஸி டிரைவர், சிவராமன் (27) என்பவர் மது போதையில் (கழுத்தில் தங்கச் செயின் கையில் மோதிரம் அணிந்தபடி) சாலையில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பெண்கள், தங்கச் செயினையும் மோதிரத்தையும் கழற்றி அந்த பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தியிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

Taxi driver
Taxi driverPt desk

இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி குடி போதையில் இருந்த சிவராமனின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பியுள்ளார். மது போதையில் இருந்த சிவராமன், தான் அணிந்திருந்த நகைகளை திருடவந்ததாக நினைத்து, என் போன், வண்டி சாவி நகை எல்லாவற்றையும் நீ தான் வைத்திருக்கிறாயா? எனக் கேட்டபடி, கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

Retired Police SI
பரப்புரையில் கல்வீச்சு தாக்குதல்.. நெற்றியில் காயம்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்-க்கு நடந்தது என்ன?

இதில், படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com