விஜய் கிங் கிடையாது என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
விஜய் கிங் கிடையாது என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்web

”விஜய் கிங் கிடையாது.. அவர் அவசியமில்லை” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

விஜய் கிங் கிடையாது என்றும், பாஜக கூட்டணிக்கு அவர் அவசியமில்லை என்றும் மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
Published on
Summary

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க தேவையில்லை என்று கூறியுள்ளார். அவர், விஜய் கிங் கிடையாது என்றும், அவரை கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணியில் அமமுக, அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அதேநேரத்தில், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. தவெக மற்றும் நாதக இருதரப்பும் தனித்து போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

அதிமுக - பாஜக
அதிமுக - பாஜக

இந்தசூழலில் முதலில் விஜய் தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பார்த்த அதிமுக-பாஜக கூட்டணி, அன்புமணி, டிடிவி தினகரன் வருகைக்கு பிறகு விஜயின் தவெகவை விமர்சித்து வருகிறது.

அந்தவகையில் தவெக குறித்தும் விஜய் குறித்தும் பேசியிருக்கும் மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், விஜய் கிங் கிடையாது என்றும், அவரை கூட்டணிக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

விஜய் கிங் கிடையாது என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
திமுக உடன் பாமக சேர்ந்தால் ஏற்பீர்களா..? - திடமாக திருமாவளவன் சொன்ன பதில்!

விஜய் கிங் கிடையாது..

தவெக குறித்து பேசியிருக்கும் மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், “தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. விஜய் வாக்குகளை பிரிப்பவர்தான்.. கிங் கிடையாது..

நிறைய நடிகர்கள் வருவார்கள் போவார்கள், இதற்கு முன்பும் நிறைய திரை நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என பேசியுள்ளார்.

விஜய் கிங் கிடையாது என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஜனநாயகப் போர்| வேலுநாச்சியார் குறித்து குட்டிக்கதை.. சூசகமாக விஜய் சொன்ன விசயம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com