கேமரா கடத்த முயன்றவர்
கேமரா கடத்த முயன்றவர்புதியதலைமுறை

வாடகைக்கு எடுப்பதுபோல் நடித்து 2 லட்சம் மதிப்பிலான கேமராவை கடத்த முயற்சி.. மடக்கிப்பிடித்த போலீஸ்

மதுரையில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கேமிராவை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து சென்னைக்கு பேருந்தில் கடத்த முயன்ற இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஒன் போஸ் போட்டோகிராபி என்ற பெயரில் பாலகிருஷ்ணன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். பிரபல போட்டோ ஸ்டுடியோவான இந்தக் கடையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து கேமரா உள்ளிட்ட பொருட்கள் வாடகைக்கு விடப்படுவது வழக்கம்.

அதன்படி மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர், மதுரையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒன் போஸ் போட்டோகிராபிக் கடையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஸ்டில் கேமரா, குடை, ஸ்டாண்ட், லென்ஸ் உட்பட ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை முன்பணம் கொடுத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கேமரா கடத்த முயன்றவர்
"டீ.சி கொடுங்க"- மாணவர்களை அரசுப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் - என்ன காரணம் தெரியுமா?

இந்த நிலையில் கேமரா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற அந்த இளைஞர் வெகுநேரமாகியும் பொருட்களை எடுத்து வராததால், சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், வாடகைக்கு கேமரா எடுத்துச் சென்றவரின் வழியெங்கும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது மதுரை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றில் கேமரா உள்ளிட்ட பொருட்களை அந்த இளைஞர் வைத்ததோடு சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்தில் ஏறி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தனியார் சொகுசு பேருந்தின் முன்பதிவு மையங்களில் விசாரணை நடத்திய பொழுது மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த தனியார் சொகுசு பேருந்து, சென்னைக்கு சென்று கொண்டிருந்ததும், இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் நின்று செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது நண்பரான தமிழ்நாடு மாநில புகைப்பட கலைஞர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தமிழ்ச்செல்வன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரை அழைத்துக் கொண்டு செங்குறிச்சி சாலையோரத்தில் உள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்த அந்த பேருந்து ஆய்வு செய்தபோது, பேருந்தில் உட்கார்ந்திருந்த ராஜ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் மதுரையில் உள்ள ஒன் போஸ் போட்டோகிராபி கடையில் ஆன்லைனில் பதிவு செய்து கேமரா வாடகைக்கு எடுத்து செல்வது போல் நடித்து சென்னைக்கு விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரியவந்தது.

கேமரா கடத்த முயன்றவர்
638 முறை கொல்ல துடித்த அமெரிக்கா.. மரணத்தை வென்ற ஃபிடல் கேஸ்ட்ரோவின் கதை

இதையடுத்து பேருந்தில் இருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த ஸ்டில் கேமரா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொழுது, திடீரென அவர் தப்பி ஓடி தலைமறைவானார்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல இடங்களில் போலீசார் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட ஸ்டில் கேமரா உள்ளிட்ட பொருட்களை பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனர்.

கேமரா கடத்த முயன்றவர்
புதிய கார் மற்றும் லாரி வாங்கி போதைப்பொருள் கடத்தல்... 4 இளைஞர்கள் கைது - சிக்கியது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com