\
Udhayanidhi Stalin Walks Out Over Coimbatore Student Murder
உதயநிதி ஸ்டாலின்Pt web

”அரசின் விளக்கம் முறையாக இல்லை” சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு!!

கோவை மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் முறையாக இல்லை எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 4 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கு சம்பவம், திருவெற்றியூர் பள்ளி மாணவன் கொலை வழக்கு சம்பவத்தை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதைத்தொடர்ந்து, திமுக, அதிமுக, பா.ம.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தின் மீது எழுந்து பேசினர்.

உதயநிதி
உதயநிதிPt web

இதற்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா பதில் அளித்து பேசினர். குறிப்பாக ஆதவ் அர்ஜூனா பேசும்போது திமுக அச்ட்சியில் ஜாபர் சாதிக் போதை பொருள் பயன்படுத்திய வழக்கும், திமுக முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் உடனே தொடர்பு இருக்கிறது. அதேபோல் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகள் மீது திமுக உறுப்பினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது போன்றவை குறித்து பேசினார். அந்த நேரத்தில் திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபாநாயகர் அமைதி படுத்திய நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததில் அரசு அளித்த விளக்கம் ஏற்கும் நிலையில் இல்லை என எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். 

Udhayanidhi Stalin Walks Out Over Coimbatore Student Murder
திருமாவளவன் 64-வது பிறந்த நாள்.. கள்ளக்குறிச்சியில் தமிழ்தேசிய எழுச்சி மாநாடு.. முதல்வர் வாழ்த்து!

பின்னர் சட்டமன்ற வளாகம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கோவையில் மாணவன் அமுதன் குறித்த தகவலை, காவல்துறையினர், போதை கும்பலிடம் தெரிவித்து உள்ளார்.அமுதனை போதை கும்பல் அடித்தே கொலை செய்து இருக்கிறது. இது குறித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் பேசினோம். ஆனால் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக  உரிய பதில் அளிக்கவில்லை. 

மாறாக திமுக-வை  குற்றஞ்சாட்டி பேரவையில் பேசுகின்றனர்.  அதேபோல் அமைச்சர் சரகுமார் பவுடர் பயன்படுத்தியதை திமுக ஆட்சி என்கிறார். அப்படி எனில் அமைச்சர் சரக்குமார் பவுடர் போதை பொருள் என ஏற்றுக் கொள்கிறாரா ? ஏன் த.வெ.க அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Udhayanidhi Stalin Walks Out Over Coimbatore Student Murder
விசிக ஜோதிமணி கோரிக்கை.. முதல்முறை எம்.எல்.ஏக்களுக்கு கார், உதவியாளர்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com