\
Udhayanidhi Stalin Says 59 DMK MLAs Won’t Take Govt Cars
உதயநிதி - ஆதவ் அர்ஜுனாPt web

”59 எம்.எல்.ஏ-க்களும் காரை பெறமாட்டோம்” - சட்டப்பேரவையில் உதயநிதி!!

தமிழக அரசு அறிவித்த எம்.எல்.ஏ-க்களுக்கான கான காரை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேரும் பெறமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி, தொகுதி முழுவதும் மக்களைச் சந்தித்து பணியாற்றுவதற்கு என்னிடம் சொந்தமாக வாகன வசதியும் இல்லை. அதேபோல், ஓர் உதவியாளரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கும் அளவிற்கான பொருளாதார வசதியும் என்னிடம் இல்லை. இதே நிலைமையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதியும், உதவியாளரை நியமித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜோதிமணி
ஜோதிமணிPt web

இந்தக் கோரிக்கையை ஏற்ற முதல் அமைச்சர் விஜய் ஆகஸ்ட் 19-ம் தேதி அனைத்து சட்டமன்றத்தில் பேசும்போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். எனினும், இந்த அறிவிப்புக்கு ஒருபக்கத்தில் வரவேற்பு இருந்தாலும், தமிழ்நாட்டின் நிதிநிலை சரியில்லை என தவெக கூறியிருக்கும் போது, இந்த அறிவிப்பு எதற்கு என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Udhayanidhi Stalin Says 59 DMK MLAs Won’t Take Govt Cars
தொகுதி மறுவரையறை | தமிழக அரசின் நிலைப்பாடு மாறியதா? தவெக விளக்கம்!!

இந்தசூழலில் தான், இன்று சட்டப்பேரவையில் பேசியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக இந்த அரசு முடிவு எடுத்து அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் நிதிநிலை சரியில்லை என முதல்வர் கூறி வருகிறார். இதனால், அரசு வழங்கும் கார்களை திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ-க்களும் பெறப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித்தலைவரின் உரை சட்டப்பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது. இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ”கார் வைத்திருக்கும் தவெக எம்எல்ஏக்கள் யாரும் சென்று கார் கேட்கப்போவதில்லை; கார் வைத்திருக்காத எம் எல் ஏ க்கள் அனைவருக்கும் அரசு காரில் சென்றால் ஒரு மரியாதையாக இருக்கும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனாNGMPC059

ஏன் எதிர்க்கட்சித்தலைவருக்கு 2, 3 வீடுகள் இருக்கிறது; ஆனால் அவர் அரசு பங்களாவில்தான் இருக்கிறார்; அந்த கடிதத்தை பொதுப்பணித்துறை அமைச்சராக, என்னிடம்தான் அரசு பங்களா வேண்டும் என்று கொடுத்தார்.

நீங்கள் உங்கள் தேர்தல் பத்திரத்தில் கார் இல்லை என்று சொல்லலாம்; வீடு இல்லை என்று சொல்லலாம்; 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் எங்கள் கட்சியிலும் சரி, பிற கட்சிகளிலும் சரி கார் இல்லாமலும், வீடு இல்லாமலும் இருக்கிறார்கள்” என தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Udhayanidhi Stalin Says 59 DMK MLAs Won’t Take Govt Cars
தொகுதி மறுவரையறை | 8 நாளில் மாறிய விஜயின் முடிவு.. அமித் ஷா முன்னிலையில் அதிர்ச்சி!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com