\
TVK Delivers Clarification on Delimitation Stand amid Criticism
விஜய் - அமித் ஷாTN Govt

தொகுதி மறுவரையறை | தமிழக அரசின் நிலைப்பாடு மாறியதா? தவெக விளக்கம்!!

தொகுதி மறுவரையரை குறித்த விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு ஒரே வாரத்தில் மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அந்த விமர்சனங்களுக்கு தவெக ஐடி விங் விளக்கமளித்துள்ளது.
Published on

31ஆவது தென்மாநில முதல்​வர்​கள் மாநாடு சென்​னையை அடுத்த கோவளத்​தில் இன்று நடை​பெற்றது. இதில், தென்மாநிலங்​களின் முதல்​வர்​கள் மற்​றும் உயர​தி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர். மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளாதார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோசனை நடத்​தப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுக நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என கேட்டு வருகிறது.

விஜய்
விஜய்Pt web

இந்தசூழலில் தான், இன்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் விஜய், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறையாத வகையில் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்டமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என அதாவது No Delimitation என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என அதாவது Fair Delimitation என முதல்வர் விஜயின் பேச்சு சர்ச்சையானது.

TVK Delivers Clarification on Delimitation Stand amid Criticism
ஆங்கிலம் இந்திய மொழி கிடையாதா? 22 மொழிக்கு ஆசிரியர்கள் எப்படி? அதிரடி கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்!

இதையடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் தொடர்பாக விமர்சித்து வரும் நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் நிர்மல்குமார், ”தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தான், தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுவதாக தவெக ஐடிவிங் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் முதலமைச்சரால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள். தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆக. 12இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது.

தென் மண்டலக் குழுக் கூட்டம்
தென் மண்டலக் குழுக் கூட்டம்Dipr

அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி அன்றே பிரதமருக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Delivers Clarification on Delimitation Stand amid Criticism
முதல்வர் விஜய்க்கு முக்கியப் பதவி.. அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com