ஓசூர் | தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது விபத்து... இருவர் பரிதாபமாக பலி

ஓசூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 5 பேரில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஓசூர்
ஓசூர்புதிய தலைமுறை

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

---------

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேகல் தாலுகாவில் உள்ள பேடர்ஹல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி (சென்ட் அக்னேஸ்) கட்டடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணியை கர்நாடக மாநில ஹோசாகோட்டை பகுதியில் சேர்ந்த பிரதாப் பில்டர்ஸ் மேற்கொண்டு வருகிறது.

கட்டுமானத்தின் முதல்தளத்தில் சிமெண்ட், கான்கிரீட் மோல்டிங் போடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது தளத்தில் இன்று கம்பி கட்டப்பட்டு கான்கிரீட் மோல்டிங் போடப்பட்டது. அப்போது அதிக பாரம் காரணமாக எதிர்பாராத விதமாக கான்கிரீட் மோல்டிங் சரிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது.

ஓசூர்
நாமக்கல்: 6 மாத ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்

சத்தம் கேட்டு, அப்பகுதியில் அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால், அவர்களை மட்டும் பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தனர். இக்கட்டுமான பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மின்னர் பிஸ்வாஸ், ஜாகித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொக்லைன் வாகனம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் செண்ட்ரிங் சரியாக அமைக்காததுதான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com