கிருஷ்ணகிரி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரியில் தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Youths Death
Youths Deathpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள கிறிஸ்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுரியப்பன் என்பவரது மகன் ஸ்டீபன் (25). குளிர்பான விநியோகஸ்தராக வேலை பார்த்து வந்த இவரும், சங்ககிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த பிரவீன் பால்ராஜ் (25) என்பவரும் இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டை தளி சாலையில் உள்ள கோட்டை உளிமங்கலம் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர்.

Hospital
Hospitalpt desk

அப்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சஞ்சய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரவீன் பால்ராஜ் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Youths Death
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரஷ்ய இளைஞர்! கயிறுக் கட்டித்தூக்கிய போலிசார்.. சென்னையில் பரபரப்பு

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com