\
ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர்
ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர்PT

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரஷ்ய இளைஞர்! கயிறுக் கட்டித்தூக்கிய போலிசார்.. சென்னையில் பரபரப்பு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
Published on

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டு அருகே கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு மேல் சட்டை அணியாமல் வந்த ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவர் சாலையின் நடுவே நின்று ரகளைச் செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் இளைஞரை தடுத்து நிறுத்த முயன்ற போது, அவர் காவலர்களைத் தாக்க முயன்றுள்ளார்.

அந்த நபரை பிடிக்க உதவிக்கு வந்த வாகன ஓட்டிகளையும், ஒரு பெண் காவலரையும் தாக்க முயற்சித்துள்ளார். மேலும் அவரை, அருகில் இருந்த ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல காவலர்கள் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரை ஏற்ற முயன்று முடியாமல் திணறியுள்ளனர் .

பின்னர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞருடன் வந்த வெளிநாட்டினர் மூலம் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர்களும் கையில் மது பாட்டிலுடன் போதையில் இருந்ததால் வேறு வழி இல்லாமல் சாலையின் நடுவே ரகளைச் செய்த நபரை கயிறுக் கொண்டு கட்டி மடக்கிப் பிடித்தனர்.

ரஷ்ய இளைஞர் மது போதையில் இருந்தாரா? அல்லது வேறு ஏதும் போதை பொருட்களை உட்கொண்டாரா? என மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அண்ணாசாலை போலீசார் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com