செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு! அடுத்து என்ன?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அப்போது செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி நீதிமன்ற காவலில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்துள்ளார்.

சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது என தீர்ப்புக் கூறி, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி பரத சக்தரவர்த்தி.
இதைத்தொடர்ந்து வழக்கு 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படலாமென சொல்லப்படுகிறது.
தீர்ப்பின் முழு விவரங்களை, இங்கே அறியலாம்: