விஜய்
விஜய்pt web

NEET | “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுக மீது விஜய் விமர்சனம்

தவெக தலைவர் விஜய் நீட் விவகாரம் தொடர்பாக எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என பாடல் வரிகளைக் குறிப்பிட்டு திமுக மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Published on

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. எப்போதுதான் நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுகதான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததாகவும், நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய முடியாது, மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும்” எனவும் பதிலளித்தார். நீட் தேர்வில் ஆரம்பித்த உரையாடல் INDIA கூட்டணி, NDA கூட்டணி வரை நீண்டது.

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

விஜய்
கனடா பிரதமர்|போட்டியிடும் இந்திய வம்சாவளி எம்.பி.. யார் இந்த சந்திரா ஆர்யா?

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்
கடலூர்: மதுபானக்கடைக்குச் சென்றவர் கொலை.. கிராமத்தினர் முற்றுகைப் போராட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com