விஜய் - உதயநிதி - ஷாநவாஸ் - ராஜ்மோகன்
விஜய் - உதயநிதி - ஷாநவாஸ் - ராஜ்மோகன்PT

குறிவைக்கப்படும் தவெக ராஜ்மோகன்? இணையத்தில் வைரலாக்கப்படும் வீடியோ! ராஜ்மோகன் சொல்வது என்ன?

குறிவைக்கப்படும் தவெக ராஜ்மோகன்? இணையத்தில் வைரலாக்கப்படும் வீடியோ! ராஜ்மோகன் சொல்வது என்ன?
Published on

திருப்புவனம் அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவத்தில், தவெக ராஜ்மோகன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அஜித்குமார் என்ற பெயரில் துவங்கி, ரஜினிகாந்த் சர்ச்சை வரை விவகாரம் பூதாகரமான நிலையில், தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் ராஜ்மோகன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? ராஜ்மோகன் சொல்லும் விளக்கம் என்ன என்று பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் ராஜ்மோகன், தவெகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார். கட்சிக்குள் வந்த பிறகு, முக்கிய நிகழ்ச்சிகளை அவரே தொகுத்து வழங்குகிறார்.. கட்சி சார்பாக செய்தியாளர் சந்திப்பு, நேர்காணல் என்று ஆக்டிவாக இருக்கும் ராஜ்மோகன், திருப்புவனம் அஜித்குமார் விவகாரம் குறித்து பேசியது பேச்சு பொருளாக மாறியது. கடந்த ஜூன் 28ம் தேதி திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது மரணித்த நிலையில், இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

NGMPC059

இந்த விவகாரத்தில், ஆளும் அரசுக்கு தவெக தலைவர் விஜய்யும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, அஜித்குமார் உட்பட, கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இந்த நிலையில், மேடை ஒன்றில் பேசிய ராஜ்மோகன், திருப்புவனத்தில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாருக்கும் சேர்த்து சிந்திக்கக்கூடிய தலைவராக, தங்கள் தலைவர் விஜய் இருப்பதாக பேசினார். இதனைப் பிடித்துக்கொண்ட சிலர், அஜித்குமார் என்ற பெயரை பேசுபொருளாக்கிய நிலையில், நேர்காணல் ஒன்றில் விளக்களித்தார் ராஜ்மோகன். அப்போது, உயிரிழந்தவர் தொடர்பான தகவலை சொன்னபோது, அவர் பெயரை சொல்ல வேண்டி இருந்தது.. மற்றபடி இறந்தவரின் பெயர் தியாகராஜன்.. ரஜினிகாந்த் என்று எதுவாக இருந்தாலும், தகவலை சொல்ல வேண்டியது என் கடமை என்று சொல்லி முடித்தார்.

ரஜினி
ரஜினி

இதனைப் பிடித்துக்கொண்ட ரஜினி ரசிகர்கள் சிலர், ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்தத்தோடு, அவர் உயிரிழந்துவிட்டதாக RIP என்று பதிவுகளை போட்டனர். மீம்ஸ்கள் வரை ட்ரோல் செய்த நிலையில், மற்றொரு நேர்காணலில் விளக்கமளித்த ராஜ்மோகன், “ரஜினிகாந்த் மீது தான் வைத்திருக்கும் மதிப்பு ரஜினி ரசிகர்களுக்கே தெரியும்.. உதாரணத்திற்காக அந்த பெயரை சொன்னேன்.. இதனால் ரசிகர்கள் வருத்தப்பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இப்படியாக, இந்த விவகாரம் பேசுபொருளாகவே இருக்கும் நிலையில், நடந்த இந்த சம்பவம் குறித்து ராஜ்மோகனை தொடர்புகொண்டு பேசினோம்.. அப்போது, பேசியதை கீழே உள்ள வீடியோ தொகுப்பில் காணலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com