TN Election Results 2026
#TNElectionResultsPT

#TNElectionResults | 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி.. 108 இடங்களை சீல் செய்த தவெக!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நிறைவுற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

#TNElectionResults
#TNElectionResultsx page

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன. அதன்படி, காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன.த்

போட்டி கொடுக்கும் விஜய்

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவரும் நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போரைக் கண்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள் எப்படி இருக்கும்?

ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு

விஜயின் தந்தை சாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று காலை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.

 வாக்கு எண்ணிக்கை அறைகள் திறப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பல மையங்களில் திறக்கப்படுகின்றன. தொடர்ந்து, வாக்கு எண்ணும் இடத்துக்கும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடே பெரும் எதிர்பார்த்து காத்திருந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அதன்படி, முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

பெரம்பூரில் விஜய் முன்னிலை

விஜய்
விஜய்pt

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிவேகத்தில் எண்ணப்படும் தபால் வாக்குகள் 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக தபால் வாக்குகள் அதிவேகமாக எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழிசை  சௌந்தரராஜன் முன்னிலை

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலை பெற்றுள்ளார்.

மா. சுப்ரமணியன் முன்னிலை

சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்ரமணியன் முன்னிலை.

10 தொகுதிகளில் திமுக முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 11 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களிலும் தவெக 1 இடத்திலும் முன்னிலை.

திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு.!

தபால் வாக்குகள் எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் விஜய் திருச்சி கிழக்கில் பின்னடைவு.

விருகம்பாக்கம் பிரபாகர ராஜா முன்னிலை!

விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர ராஜா முன்னிலை பெற்றுள்ளார்.

இரு இடங்களில் தவெக  முன்னிலை.!

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், தவெக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு

திருச்சி மேற்கு தொகுதியில், கே.என். நேரு பின்னடைவு. தவெக வேட்பாளர் முன்னிலை.

ஆவடி நாசர் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆவடி நாசர் முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு

ராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

தியாரகராய நகர் தொகுதியில் என்.ஆனந்த் முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் 206 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பின்னடைவு

திரு.வி.க நகர் அதிமுக சார்பில் போட்டியிட்டிருக்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பின்னடைவு.

மரியா ஜான் முன்னிலை

பாளையங்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் மரியா ஜான் 104 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

செந்தில் பாலாஜி முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி 872 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

விருகம்பாக்கம் தவெக தொகுதியில் பின்னடைவு

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 215 வாக்குகள் பெற்று முன்னிலை; தவெக வேட்பாளர் சபரிநாதன் 211 வாக்குகள் பெற்று பின்னடைவு

திருச்செங்கோட்டில் தவெக முன்னிலை

திருச்செங்கோடு தொகுதியில், தவெக வேட்பாளர் அருண்ராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் விஜய் முன்னிலை

தபால வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை.

ஆதவ் அர்ஜுனா பின்னடைவு!

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா பின்னடைவு.

செங்கோட்டையன் முன்னிலை

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெகவின் செங்கோட்டையன் முன்னிலை

திமுக முகவர் உயிரிழப்பு

திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக முகவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.

கொளத்தரில் ஸ்டாலின் பின்னடைவு

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பின்னடைவு.

உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு. 295 வாக்குகள் பெற்று தவெக முன்னிலை.

திருப்பூர் தெற்கில் தவெக முன்னிலை

திருப்பூர் தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் பாலமுருகன் 2020 வாக்குகள் பெற்று முன்லை

துரைமுருகன் பின்னடைவு

காட்பாடி தொகுதியில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பின்னடைவு

திருச்சி கிழக்கில் விஜய் முன்னிலை

திருச்சி தொகுதியில் தவெக தலைவர் விஜய் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார்.

தவெக முக்கிய முகங்கள் முன்னிலை நிலவரம்.!

வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா முன்னிலை.

திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் முன்னைலை.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் முன்னிலை.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் முன்னிலை.

தி நகர் தொகுதியில் என். ஆனந்த் முன்னிலை

தொடர் முன்னிலையில் தவெக

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக 35 இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. அதிமுக 27 தொகுதிகள் முன்னிலையில் 2வது இடத்திலும், திமுக 25 தொகுதிகள் முன்னிலையில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

முன்னிலை நிலவரம்

தவெக - 38

அதிமுக - 30

திமுக - 28

நாதக - 1

காரைக்குடியில் சீமான் பின்னடைவு

காரைக்குடி தொகுதியில் திமுக தலைம ஒருங்கிணைபாளர் சீமான் பின்னடைவு. தவெக வேட்பாளர் டி.கே. பிரபு முன்னிலை.

முன்னிலை நிலவரம்

தவெக - 50

அதிமுக - 37

திமுக - 31

நாதக - 1

தற்போதைய முன்னிலை நிலவரம்.!

தவெக - 50

அதிமுக - 37

திமுக - 31

நாதக - 1

ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை.

பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை.

விருதாச்சலம் தொகுதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

தற்போதைய முன்னிலை நிலவரம்.!

தவெக - 60

அதிமுக - 43

திமுக - 34

நாதக - 1

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம்

சென்னையில் பெரும்பாலான இடங்களில் தவெக முன்னிலை

வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், சென்னையில் 16 தொகுதிகள் உள்ள நிலையில் 14 தொகுதிகளில் தவெக பெரும்பாண்மை பெற்றுள்ளது.

தற்போதைய முன்னிலை நிலவரம்.!

தவெக - 72

அதிமுக - 52

திமுக - 37

நாதக - 0

திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை

திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக வேட்பாளர் நிர்மல் குமார் முன்னிலை.

தற்போதைய முன்னிலை நிலவரம்.!

தவெக - 80

அதிமுக - 58

திமுக - 44

நாதக - 0

சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை.!

தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவரும் நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

வெளியானது முதற்கட்ட நிலவரம்!

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தவெக 85 இடங்களில் முன்னிலை. அதிமுக 66 இடங்களில், திமுக 50 இடங்களில் முன்னிலை என முதற்கட்ட நிலவரங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு.!

தவெக அலுவலத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பனையூர் தவெக அலுவலத்துக்கு பாதுகப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை 

செல்வப்பெருந்தகை பின்னடைவு!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 33 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளிலும், திமுக 16 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

நெல்லையில் தவெக ஆதிக்கம்

சென்னையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள 5 தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்று வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு.!

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், விருதாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

எடப்பாடியில் கே. பழனிசாமி தொடர்ந்து முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.

எல். முருகன் பின்னடைவு

அவிநாசி தொகுதியில் போட்டியிட்டுள்ள பாஜக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 68 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 55 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

விஜய் வீட்டின் முன் காவல்துறை குவிப்பு!

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பும், துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.!

234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரங்கள் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி, தவெக 100 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும், திமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 83 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

முதல்வர் வேட்பாளர்களின் தற்போதைய நிலவரம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்- 10,639 வாக்குகள் பெற்று பின்னடைவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி- 11,240 வாக்குகள் பெற்று முன்னிலை

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 3,711 வாக்குகள் பெற்று பின்னடைவு

தவெக தலைவர் விஜய் 13,055 வாக்குகள் பெற்று பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் 3870 வாக்குகள் பெற்று முன்னிலை

மதுரை மாவட்ட முன்னிலை நிலவரம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 98 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 68 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 44 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 4 சுற்று நிறைவியில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக ஆதிக்கம்!

செங்கல்பட்டில் உள்ள 7 தொகுதிகளில் 6-ல் தவெக முன்னிலை பெற்றுள்ளது. 

தொடர் முன்னிலையில் செந்தில் பாலாஜி

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி 18,775 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

எழும்பூர் தொகுதி நிலவரம்!

தவெக வேட்பாளர் ராஜ்மோகன் 10,760 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதையடுத்து, திமுகவின் தமிழன் பிரசன்னா 6,314 வாக்குகள் பெற்று இடண்டாவது இடத்திலும், அதிமுகவின் அபிஷேக் ரங்கசாமி 6,260 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நாதக வேட்பாளர் சரண்யா 17 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 98 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 78 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 49 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை!

நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், தற்போது, கடலூர், குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது.

1 இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை.!

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 10 இடங்களில் போட்டியிட்டிருந்த நிலையில், விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது.

பாஜக முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு

சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அதேசமயம், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை.!

கோபிச்செட்டிபாளையத்தில் தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போட்டியிட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ீ

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு!

கொளத்தூர் தொகுதியில் 5-வது சுற்றிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக பின்னடைவு.

தவெகவினர் கொண்டாட்டம்

வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்தசூழலில் தான், தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரூர் தொகுதியில் அதிமுக முன்னிலை

தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, இந்தியாவின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற கரூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் கூர்ந்து கவனிக்கக்கூடிய தொகுதியாக மாறியது. இந்த சூழலில் தான், வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், அங்கு அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் தியாகராஜன் இரண்டாவது இடத்திலும், தவெக வேட்பாளர் மதியழகன் 3வது இடத்திலும் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 72 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 57 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில், அதிகபட்சமாக தவெக 13.13 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. தொடர்ந்து, திமுக 11.88 சதவீத வாக்குகளும், அதிமுக 10.47 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி 1.53 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.

வடக்கு மண்டலத்தில் வலுவான நிலையில் தவெக.!

வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 82 இடங்களில் தவெக 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கொளத்தூர் தொகுதி முன்னிலை நிலவரம்!

தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை?

வாக்கு எண்ணிக்கையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

எடப்பாடி தொகுதியில் சுயேட்சை 2-வது இடம்

வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகிவரும் நிலையில், தவெக 107 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. முன்னதாக, 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டிருந்தாலும் எடப்பாடி தொகுதியில் தவெகவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தவெக அங்கு போட்டியிடவில்லை. இந்த சூழலில்தான், பிரேம்குமார் எனும் சுயேட்சை வேட்பாளருக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க விஜய் கேட்டுகொண்டிருந்த நிலையில், அவர் தற்போது கே. பழனிசாமிக்கு அடுத்தபடியாக வாக்குகளை பெற்று வருகிறார். அதன்படி, கே. பழனிசாமி 73298 வாக்குகளும், பிரேம்குமார் 27219  வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்.

விஜய் வீட்டில் த்ரிஷா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வருகை. அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது இடத்துக்கு நகர்ந்தது திமுக.!

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்களில் திமுக நீண்ட நேரமாக மூன்றாவது இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது 66 இடங்களில் பெற்று 2-வது இடத்துக்கு திமுக முன்நகர்ந்திருக்கிறது. 3-வது இடத்தில் 63 இடங்கள் முன்னிலையில் அதிமுகவும், முதல் இடத்தில் 105 இடங்களுடன் தவெகவும் இருக்கிறது.

100 வாக்குகள் வித்தியாசம் தான்.!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல தொகுதிகளில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை உள்ளது.. சுமார் 100 தொகுதிகளில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளது

வெற்றி முகத்தில் விஜயின் நண்பர்

தமிழக வெற்றி கழகம் தவெக 100 இடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், விஜய், தனது நண்பர் ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர், தற்போது வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் முன்னிலை

பெரம்பூர் தொகுதியில் விஜய் 13,574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஆறாம் சுற்று முடிவில் விஜய் 34,482 வாக்குகள் பெற்றுள்ளார். திருச்சி கிழக்கில் 13,509 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரம்; திமுக முன்னேற்றம்!

தவெக - 104

திமுக - 67

அதிமுக - 63

நாதக - 0

விஜயின் பெற்றோர்கள் கொண்டாட்டம்!

திமுக கூட்டணி முன்னிலை எண்ணிக்கை

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்களில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் 49,099 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அதேசமயம், 41051 மட்டுமே பெற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் 2-வது இடத்தில் இருக்கிறார்.

தஞ்சையில் தவெக வெற்றி.!

தஞ்சாவூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஜய் சரவணன் சுமார் 86 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

80 லட்சம் வாக்குகளைக் கடந்தது தவெக

வாக்கு எண்ணிக்கையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 80 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது.

மதுரை தெற்கில் தவெக வெற்றி

மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் மற்றும் பாஜகவின் ராம் ஸ்ரீனிவாசன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி 58,598 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இரு தொகுதிகளிலும் விஜய் முன்னிலை!

பெரம்பூர் தொகுதியில் கிட்டத்தட்ட 27,000 வாக்குகளையும், 36895 வாக்குகளையும் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இதுவரை வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள்

தூத்துக்குடி, தாம்பரம், மதுரை தெற்கு, தஞ்சை ஆகிய தொகுதிகளில் இதுவரை தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

செங்கோட்டையன் வெற்றி

கோபிச்செட்டிப்பாளையத்தில் தொடர்ச்சியாக 5-வது முறை செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், 10-வது முறையாக சட்டமன்றம் செல்கிறார்.

கூடலூரில் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் திமுகவின் திராவிட மணி வெற்றி பெற்றுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவு

போடிநாயக்கனூர் தொகுதியில், தவெக வேட்பாளரை விட 487 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

கே.என். நேரு வெற்றி 

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என். நேரு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்த அவர், தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்திருக்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ”எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் பெற்றுள்ளார். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதைவிட என்ன வேணும்? நான் 125 இடங்களில் வெற்றி பெறுவார் என நினைத்தேன். விஜயை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். எனக்கு தலைவர் அவர்தான். நான் தொண்டன்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

1977-ல் எம்.ஜி.ஆர்-ன் அதிமுக 33.5 சதவீதம்!

1977-ல் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர்-ன் அதிகபட்சமாக 33.5 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த சூழலில், தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதே 22 சதவீத வாக்குகளைக் கடந்திருக்கிறது.

அண்ணாநகரில் தவெக வெற்றி

அண்ணாநகரில் தவெக வேட்பாளர் ராம்குமார் கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா பின்னடைவு!

மன்னார்குடி தொகுதியில் டிஆர்பி ராஜாவும், திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

விராலிமலையில் சி. விஜயபாஸ்கர் வெற்றி

தற்போதைய முன்னிலை நிலவரம்!

தவெக - 107 தொகுதிகள்

திமுக கூட்டணி - 73 தொகுதிகள்

அதிமுக கூட்டணி - 53 தொகுதிகள்

நாதக - 0

ஜெயக்குமார் தோல்வி!

ராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியடைந்திருக்கும் நிலையில், தவெக வேட்பாளரும் ஆட்டோ டிரைவருமான விஜய் தாமு வெற்றி பெற்றுள்ளார்.

கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வி!

மதுரை மத்தி தொகுதியில் 19,124 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெற்றி

தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட என். ஆனந்த் அதிமுக வேட்பாளர் சத்தியநாரயணனை விட 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்!

164 நேரடியாக போட்டியிட்ட திமுக 58 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது

8 இடங்களில் போட்டியிட்ட விசிக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 1 இடத்தில் முன்னிலையில் இருக்கிறது.

5 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி 2 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியைச் சந்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஸ்டாலின் தற்போது, 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவு; ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கிரிஷ் சோடங்கர்

வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது எனினும் தொங்கு சட்டசபையே அமைவதற்கு வாய்ப்பிருப்பதாக பார்க்கபடும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பீர்களா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார். அதில், பெண்கள் இளைஞர்களின் வாக்கு அதிகளவில் கிடைத்ததால் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி சட்டமன்றத் தலைவராக வாய்ப்பு

வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ளார். எனினும், திமுகவில் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல மூத்தத் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், உதயநிதி திமுகவின் சட்டமன்றத் தலைவராக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

1967-க்குப் பிறகு முதல்முறை

பொய்யான கருத்துக் கணிப்புகள்

1.50 கோடி வாக்குகளைக் கடந்தது தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 1.50 கோடி வாக்குகளை தற்போதைய நிலவரப்படி கடந்திருக்கிறது.

பெரம்பூரில் விஜய் வெற்றி

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். அதேபால, திருச்சி கிழக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் கே. பழனிசாமி வெற்றி!

எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி 98,110 வித்தியாசத்தில், சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய முன்னணி நிலவரம்

தவெக - 109 தொகுதிகள்

திமுக கூட்டணி - 74 தொகுதிகள்

அதிமுக கூட்டணி - 51 தொகுதிகள்

நாதக - 0

விசிக கடும் பின்னடைவு

திமுக கூட்டணியில் உள்ள விசிக 8 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

பாஜக கடும் பின்னடைவு 

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், 1 தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது.

திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் ஏற்கனவே வெற்றி பெற்றார் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது திருச்சி கிழக்கிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அமமுக கடும் பின்னடைவு

அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், 1 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது.

தமிழிசை, விஜய பிரபாகரன் தோல்வி

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரனும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர்.

சற்று நேரத்தில் சான்றிதழ் பெறுகிறார் விஜய்.!

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாக்குவதற்காக நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்.

வழியெங்கும் வரவேற்கும் மக்கள் 

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்குவதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிளம்பி நுங்கம்பாக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், வழியெங்கும் கூடி அவரை வரவேற்று வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்க்கு விஷால் வாழ்த்து!

விஜய்க்கு  மோடி வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் வாக்கு எண்ணிக்கையில்ன் 107 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.. தவெக என்ன செய்யும்?

சட்டமன்ற தேர்தலில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க முடியும்; ஆனால் தவெக வசம் தற்போது சுமார் 108 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மீதம் 10 தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது

”விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது” - சூர்யா வாழ்த்து!

எம்.ஜி.ஆர்-ன் சாதனையை முறியடித்தார் விஜய் 

எம்.ஜி.ஆர் 1977-ல் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் 33.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தசூழலில் தான், 2026 வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 34.8 சதவீத வாக்குகளைப் பெற்று எம்.ஜி.ஆர்-ன் சாதனையை முறியடித்திருக்கிறார். அதேசமயம், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய்க்கு சிரஞ்சீவி வாழ்த்து

”மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்” - உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மதீர்ப்பை தலை வணங்கி ஏற்றிக் கொள்கிறோம்.. வெற்றி பெற்றுள்ள அனைவரும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

"தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஜயுடன் தொலைபேசி வாயிலாக பேசிய ராகுல்காந்தி!

தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விஜயுடன் பேசியிருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள் என ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

42 வாக்குகளில் மாறிய களம்..

கம்பம் தொகுதியில் திமுக, தவெக இடையே கடும் போட்டி; 42 வாக்குகள் முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் பின்னடைவு எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் ஜெகன்நாத் மிஸ்ரா 746 வாக்குகள் முன்னிலை.

திமுக vs தவெக கடும் போட்டி..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக - தவெக இடையே கடும் போட்டி. 212 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் பெரியகருப்பன்; தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 2ஆம் இடத்தில் உள்ளார்.

படித்த கல்லூரியிலேயே வெற்றிச்சான்றிதழ் பெற்ற தவெக தலைவர் விஜய்!

"வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி'' - வி.கே.சசிகலா

மீண்டும் வெற்றிப்பாதைக்கு அதிமுக திரும்பும் - எடப்பாடி பழனிசாமி

தொய்வின்றி அரசியல் பயணம் தொடரும் - ஸ்டாலின்

1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

திருப்பத்தூரில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும், திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும் இடையே பலமான போட்டி நிலவியது. இறுதிசுற்றில் இருவருக்கும் இடையே 30 வாக்குகள் வித்தியாசம் இருந்தசூழலில், வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றியை தட்டிச்சென்று வரலாறு படைத்துள்ளார்.

108 இடங்களை வென்ற தவெக!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றியை ருசித்துள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருக்கும் விஜயின் தவெக தனிம்பெரும் கட்சியாக முதலிடம் பிடித்துள்ளது. தொங்கு சட்டசபை உருவாகியிருக்கும் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com