\
Congress - tvk alliance
Congress - tvk allianceANI

SIR-க்கு எதிரான போராட்டம்: மௌனம் காக்கும் முதல்வர் விஜய்.. நாளைய போராட்டம் எப்படி இருக்கும்?

SIR-க்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் எதுவும் பேசாதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தில் தவெக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவெக தலைவர் விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததால், நாளைய போராட்டம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியதாத ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை முன்வைத்து பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன், SIR என்ற Process-ஐ எதிர்க்கிறோம். ஆனால், தனிமனிதரை மாற்றும் போராட்டமாக இதை மாற்றிவிட்டு இதிலிருந்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள். இது திசைதிருப்பும் செயல். இதற்கு நாங்கள் இரையாக மாட்டோம் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தவெக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் நான் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு அவ்வாறு சொல்லவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த சூழலில், அக்டோபர் 3-ந் தேதி சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் தவெக இந்தியா கூட்டணியில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ANI

ஆனால் , இதன் பின்னரும் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்திலும் தவெக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. மேலும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரதிநித்துவ நிர்வாகிகள் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஞானேஷ்குமார் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்காதது ஏன் என்றும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்து, நாடு முழுவதும் எதிர்கட்சிகள் வீதியில் இறங்கி போராடும்போது திமுகவின் போராட்டம் எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு காட்டமாக பதிலளித்த திமுக தலைமை, இந்தியா கூட்டணியில் இல்லாத திமுக இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று மாணிக்கம் தாகூர் கேட்க வேண்டும் என்றும் விமர்சித்திருந்தது.

அதே போல சமூக வலைத்தளத்திலும் தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் காங்கிரஸ், ஏன் கூட்டணியில் உள்ள தவெகவை கேள்வி எழுப்பவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பாக தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் போராட்டத்தில் தவெக பங்கேற்பதாக அறிவித்துள்ளது. தவெக தலைவர் விஜயோ அல்லது கட்சித் தலைமை சார்பாகவோ தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், நாளைய போராட்டம் கவனம் பெற்றிருக்கிறது.

Congress - tvk alliance
மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா.. காரணம் இதுதானா ? தமிழ்நாடு பாஜகவில் வரும் மாற்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com