TVK Leader Vijay Appears Before CBI in Delhi for Second Time
விஜய், சிபிஐPt web

டெல்லி | சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜரான விஜய்.. விசாரணை இன்றுடன் நிறைவுபெறுமா?

சிபிஐ விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் ஆஜராகியிருக்கிறார். மேலும், விஜயிடம் இன்றுடன் விசாரணையை நிறைவு செய்ய சிபிஐ திட்டமிட்டமிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Published on

2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் என்.ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு நேரில் அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.

TVK Leader Vijay Appears Before CBI in Delhi for Second Time
விஜய்Pt web

தொடர்ந்து, 2ஆம் கட்ட சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி, விஜய் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகியிருந்த நிலையில், 2 நாட்கள் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், பொங்கலை முன்னிட்டு விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய தவெகவின் வேண்டுகோளை ஏற்று 2வது நாள் விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு சிபிஐ தள்ளி வைத்தது. அதன்படி இன்று, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான 2ஆவது நாள் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

TVK Leader Vijay Appears Before CBI in Delhi for Second Time
திருமா மீது ஆ.ராசா வைத்த குற்றச்சாட்டு., கொதித்தெழுந்த விசிக!

முன்னதாக, இன்றைய (ஜனவரி 19) சிபிஐ விசாரணையில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு தனிவிமானம் மூலம் சென்ற விஜய், தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இதனையடுத்து, இன்று கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணக்கு ஆஜராகியிருக்கிறார்.

TVK Leader Vijay Appears Before CBI in Delhi for Second Time
விஜய், சிபிஐPt web

தொடர்ந்து, இன்றுடன் தவெக தலைவர் விஜயிடம் விசாரணையை நிறைவு செய்ய சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

TVK Leader Vijay Appears Before CBI in Delhi for Second Time
என்டிஏ கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையுமா?., பதிலளித்த நயினார் நாகேந்திரன்.!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com