ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்Pt web

”ஓ. பன்னீர் செல்வம் தவெகவிற்கு வருவதே நல்ல முடிவு” - முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.டி.சி. பிரபாகர்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவெகவிற்கு வருவது தான் நல்ல முடிவு என அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Published on

சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிலும், விஜயால் உருவாக்கபட்ட தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருப்பதால் இத்தேர்தல், தமிழக மக்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதேசமயம், தவெகவில் இளைஞர்கள் மட்டுமே இருக்கின்றனர். போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. அனுபவமின்மைக்கு கரூர் துயரமே சான்று எனப் பலரும் விமர்சனம் வைத்து வந்த வேளையில் தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தவெகவிற்கு பலம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

விஜய், செங்கோட்டையன்
விஜய், செங்கோட்டையன்எக்ஸ்

தொடர்ந்து செங்கோட்டையன் மூலம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை தவெகவிற்கு கொண்டு வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், அது இன்று வரை நடக்கவில்லை. மேலும், பன்னீர் செல்வத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியே முதல் தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அதிமுகவில் பன்னீர் செல்வத்துக்கு இடமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

ஓ. பன்னீர் செல்வம்
விஜய் முன்னிலையில்., தவெகவில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்.!

இதற்கிடையில் தான், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாகவும் இருந்த ஜே.டி.சி பிரபாகர், கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து, அவரது முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து கு.ப.கிருஷ்ணனும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இது, ஓபிஎஸ்-க்கு பலம் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜேடிசி பிரபாகர்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜேடிசி பிரபாகர்x

இந்த நிலையில் தான் இன்று, அண்மையில் தவெகவில் இணைந்த ஜேசிடி பிரபாகர் புதியதலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ”தவெகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவது தான் நல்ல முடிவு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நல்ல முடிவெடுப்பார். விரல் நுனியில் விவரங்களை கொண்டவர் விஜய். அவர் எங்களை விட அனுபவம் பெற்றவர். அவரின் கீழ் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. தமிழகம் மாற்றத்தை நோக்கி விரைவாக பயணித்து கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக, ஓ. பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைத்துக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஓ. பன்னீர் செல்வம்
மத்திய பட்ஜெட் 2026 | மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு இல்லை.. தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com