தவெக கொடிக்கம்பம் அனுமதி கோரிய மனு
தவெக கொடிக்கம்பம் அனுமதி கோரிய மனுpt desk

தவெக கொடிக்கம்பம் அனுமதி கோரிய மனு - 6 வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தவெக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் சரத் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”திருவீதி அம்மன் கோயில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிஎக்ஸ் தளம்

இந்த கொடிக் கம்பங்களால் எந்த இடையூறும் இல்லை. அந்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தவெக கொடிக்கம்பம் அனுமதி கோரிய மனு
என்ஐஏ கைது செய்த காஷ்மீரின் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் யார்? - பின்புலப் பார்வை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com