TVK head Vijay
TVK head Vijay web

”விசில் சின்னத்தால் அச்சம்” - மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்து விஜய் விமர்சனம்!

ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே மகளிர் தொகையை அதிகரிப்பதற்கான காரணம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
Published on

மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி சார்பில் பாராட்டுகளும், எதிர்க்கட்சித் தரப்பில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்யவைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? திமுக தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப்போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத்தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத்தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி” என அதில் தெரிவித்துள்ளார்.

TVK head Vijay
இன்றே ரூ.5000 வரவு வைப்பு.. உரிமைத் தொகையும் உயர்வு.. மகளிருக்கு ஹேப்பி நியூஸ் தந்த முதல்வர்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com