இன்றே ரூ.5000 வரவு வைப்பு.. உரிமைத் தொகையும் உயர்வு.. மகளிருக்கு ஹேப்பி நியூஸ் தந்த முதல்வர்!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்றே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்றே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ள அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான மகளிருக்கு மட்டுமே ரூபாய் 1000 வழங்கப்படும் என்று 2021 தேர்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்ட்டம் செயல்படுத்தப்பட்டு 1.31 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இத்தொகை தேர்தலுக்குப் பிறகு உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல்கட்ட தேர்தல் வாக்குறுதியின்போது, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக மகளிருக்கு ரூபாய் 2,000/- வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

