“3வது முறை மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகும்” - சிவகாசியில் டிடிவி தினகரன் பேச்சு

எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை சின்னம் தோல்வி சின்னம் என சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன் பேசினார்.
பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா
பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகாpt desk

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து சிவகாசி காரனேசன் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வாகன பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,

‘3-வது முறையாக மோடியே பிரதமராக வரவேண்டும்’

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய பிரதமர் மோடிதான் நமது பிரதமர் வேட்பாளர். திமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. இந்தியா கூட்டணி தலை இல்லாத உடல் போல உள்ளது. நமக்கு சிங்கம் போல மோடி உள்ளார்.

பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா
பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா

‘துரோகத்தின் மூலமே அதிமுகவை பழனிசாமி கைப்பற்றியுள்ளார்’

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குதியை நிறைவேற்ற முடியாத அரசாக 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி உள்ளது. மறுபக்கம் இரட்டை இலையை வைத்துக் கொண்டு பழனிசாமி ஏமாற்றி வருகிறார். துரோகத்தின் மூலமே அதிமுகவை பழனிசாமி கைப்பற்றியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலை வெற்றி சின்னமாக இருந்தது. ஆனால் இப்போது பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னம்.

பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா
"நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி மாறுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது.

‘பாடம் புகட்ட வேண்டும்’

நமது கூட்டணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், நான் தேனியிலும் போட்டியிடுகிறோம். சேலத்து சிங்கம் எனக்கூறி கொள்பவர்களும், மணிகளும், விழுப்புரத்தில் தள்ளாடுபவரும், கிருஷ்ணகிரியில் திராவிட இயக்கத் தளபதி என்பவரும் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?

பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா
பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா

திமுக கூட்டணி பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றது. இவர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சித் துணையோடு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

‘இந்தியா வல்லரசாகும்’

10 ஆண்டுகளாக நடந்த சிறந்த ஆட்சியினால் தீவிரவாதிகள் இந்தியா பக்கம் தலைவைத்து கூட பார்க்கவில்லை. அண்டை நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டுவது கிடையாது. பிரதமர் மோடியால், உலக நாடுகள் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடி 3 வது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகும்” என்று பேசினார். அவருடன் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா இருந்தார்.

பரப்புரையில் டிடிவி தினகரன் - ராதிகா
"கச்சத்தீவ பேசுறீங்களே? பாஜக ஆட்சியில் நடந்த சீனா ஆக்கிரமிப்புக்கு என்ன சொல்வீங்க”-ஃபரூக் அப்துல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com