"கச்சத்தீவ பேசுறீங்களே? பாஜக ஆட்சியில் நடந்த சீனா ஆக்கிரமிப்புக்கு என்ன சொல்வீங்க”-ஃபரூக் அப்துல்லா

கச்சத்தீவு பிரச்னை குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா பதிலளித்துள்ளார்.
பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லாட்விட்டர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வேலைகள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் பிரசாரம் களைகட்டியுள்ளது. அதேநேரத்தில், கச்சத்தீவு பற்றிய விவகாரமும் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி "கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது இந்தியர்களை ஆவேசம் அடைய செய்துள்ளதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது" என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ”இந்தியாவின் ஒற்றுமை, நலன்களை 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளது” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இது, தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. I-N-D-I-A கூட்டணியில் உள்ளவர்கள் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர் 

கச்சத்தீவு பிரச்னை குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “வங்கதேசத்துக்கு நமது நிலத்தை பிரதமர் அளித்துள்ளார். லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. அருணாச்சல் மாநில பகுதிகளுக்கு நேற்று சீனா பெயர் வைத்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பாஜக எதுவும் பதிலளிக்கவில்லை. ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒருவரைப் பார்த்து ஒரு விரலை நீட்டினால், 3 விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

பரூக் அப்துல்லா
’கட்சத்தீவை மீட்டு தாருங்கள்’ என்று தமிழக முதல்வர் கேட்கிறார்; கொடுத்தது இந்திரா காந்திதானே: பிரதமர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com