\
Trisha Into Politics? New 'Ilaya Puratchi Thalaivi' Forum!
TRISHA PT WEB

அரசியலில் களமிறங்குகிறாரா திரிஷா? ‘இளைய புரட்சித்தலைவி’ பெயரில் புதிய பேரவை!

நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் புதிய பேரவை தொடக்கங்கப்பட்டுள்ளது. ‘இளைய புரட்சித்தலைவி’ என்ற பட்டத்தையும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், திரிஷா அரசியலுக்கு வருவாரா? என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது அரசியலிலும் அடியெடுத்து வைக்கப்போகிறாரா என்ற புதிய விவாதம் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷாவை முன்னிலைப்படுத்தி அரசியல் சாயல் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், தற்போது திருநெல்வேலியில் நடிகை திரிஷா பெயரில் “இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

TRISHA
TRISHA PT WEB

திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பச்சை நிற உடையில் திரிஷா இருக்கும் புகைப்படத்துடன், “இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” என்ற வாசகத்துடன், பேரவையின் பிரத்யேக லோகோவும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதில் பதவிக்காக அல்ல.. மக்களின் உரிமைக்காக.. என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடக்க விழாவில், நடிகை திரிஷாவுக்கு “இளைய புரட்சித்தலைவி” என்ற பட்டத்தை பேரவை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போலவே திரிஷாவும் ஆளுமை நிறைந்தவர் என்று நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் சூழலில், திரிஷாவும் அவருடன் இணைந்து செயல்பட்டால் தமிழக அரசியலில் ஒரு முக்கிய ஆளுமையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகப் பேரவை நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பேரவை நடிகை த்ரிஷாவின் அனுமதியுடன் தொடங்கப்பட்டதா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Trisha Into Politics? New 'Ilaya Puratchi Thalaivi' Forum!
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி? புகார் கொடுக்கப்பட்டதா? - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!