\
HC Seeks Clarification on Obscene Messages to Kallakurichi Collector
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்file photo

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி? புகார் கொடுக்கப்பட்டதா? - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கலெக்டரால் புகார் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தலைமை செயலாளரிடம் கேட்டு நாளை பதில் தர அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: 

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக, மூத்த அதிகாரிகளிடம் பெண் ஆட்சியர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் முறையான விசாரணை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தவெக எம்எல்ஏ இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிதாக பேசப்பட்டாலும், இதுவரை தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் சார்ந்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ANI

இந்தச்சூழலில் தான், சென்னையை சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, நவம்பர் 11ம் தேதி டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றம் நடந்ததாக கூறவில்லை; எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் கோருகிறேன்.

HC Seeks Clarification on Obscene Messages to Kallakurichi Collector
லஞ்சம் வழங்காததால் பொய் வழக்கு..? காவல் ஆய்வாளர் மீது பெண் புகார்.. ஐஜி நடவடிக்கை!

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் எவ்வித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பெண் மாவட்ட கலெக்டரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல், பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்Facebook

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சம்மந்தப்பட்ட கலெக்டரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்றும், செய்தித்தாள்களில் வந்த தகவலை வைத்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரை நோக்கி, நீங்கள் வேண்டுமானால் செய்தித்தாள் வந்த செய்தியின் அடிப்படையில் நம்பி வழக்கு தொடரலாம். ஆனால், நான் இதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது என்றும், இந்த பிரச்னையில், கலெக்டர் புகார் கொடுத்தாரா? என்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட கலெக்டரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

HC Seeks Clarification on Obscene Messages to Kallakurichi Collector
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு நடந்தது துன்புறுத்தல் இல்லையா..? நீதிபதி கேள்வி!