திருச்சி சிவா பேச்சு | ’இப்படி பேசுவது அசிங்கமா இல்லையா?‘ - கொதித்து பேசிய திருச்சி வேலுச்சாமி!
காமராஜர் குறித்தான திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடும் கண்டனம் வந்து சேர்ந்திருக்கிறது.. சாகும் தருவாயில் கலைஞர் கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் கோரிக்கை ஒன்றை வைத்ததாக திருச்சி சிவா பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், காமராஜருக்கு சாகும் தருவாயில் என்ன நடந்தது என்று விளக்கியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசினார். அப்போது, “காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால், தங்கும் இடங்களில் எல்லாம் குளிர்சாதன வசதி செய்துதர கருணாநிதி உத்தரவிட்டதாகவும், உயிர்போகும் முன்பு கருணாநிதியின் கையைப்பிடித்துக்கொண்டு, நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கேட்டுக்கொண்டதாகவும் பேசினார் திருச்சி சிவா. இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து கண்டனம் வந்து சேர்ந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஆகியோரும் திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி சிவாவின் இந்த பேச்சு குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, “காமராஜர் ஒருத்தருக்காக ஏசி போட்டோம் என்று சொல்வது அசிங்கமா இல்லையா?” என்று கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கினார். திருச்சி வேலுச்சாமி பேசியதை இந்த வீடியோ பதிவில் முழுமையாக கேட்கலாம்..