பெண் தலைவருடன் மோதல்: 6 மாதம் தற்காலிக நீக்கம்.. மீண்டும் பாஜகவில் சூர்யா சிவா? - அண்ணாமலை அறிக்கை!

தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யா சிவா மீண்டும் பாஜகவில் இணைகிறார்.
சூர்யா சிவா
சூர்யா சிவாட்விட்டர்

மீண்டும்  பாஜகவில் திருச்சி சூர்யா சிவா

பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடனான மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டிருந்தார் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா சிவா. இந்த நிலையில், அவர் மீண்டும் பாஜகவில் அதே பதவியில் இணைய உள்ளார்.

இதுகுறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24.11.22 முதல் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜெ., ரஜினி பாணியில் விஜய்.. ’காக்கா - கழுகு’ குட்டிக்கதை மூலம் பதிலடி கொடுத்தது யாருக்கு?

திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டது எதனால்?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநிலச் செயலாளர் மலர்க்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இருவரும் சுமுகமாகப் பேசி முடித்துக்கொண்டதாக தெரிவித்தனர்.

சூர்யா சிவா
”சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி; நாங்கள் பேசி தீர்த்துக்கொண்டோம்” - டெய்சி பேட்டி

திருச்சி சூர்யா சிவா 6 மாத காலம் தற்காலிக நீக்கம் 

எனினும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ’பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும், அதை மாநில தலைவராக தான் ஏற்க மறுப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

ஆனால் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் எனவும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர்மேல் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும்’ என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா சிவா
'கட்சியின் நற்பெயருக்கு களங்கம்'.. சூர்யா சிவா 6 மாத காலம் சஸ்பெண்ட் - அண்ணாமலை அறிக்கை

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா சிவா

மேலும், அந்தச் சமயத்தில் ’பாஜகவில் இருந்து விலகுவதாகவும், பாஜக எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் சூர்யா சிவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், ‘திருச்சி சூர்யாவாகிய நான், பாஜக பிரமுராகவே இப்போதும் தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை’ எனப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா சிவா
”இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” - சூர்யா சிவா ட்வீட்
சூர்யா சிவா
"இன்னும் நான் பாஜக-வில் தான் இருக்கிறேன்; அண்ணாமலையின் ஏ-டீம் நான்"- சூர்யா சிவா பேட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com