ஜெ., ரஜினி பாணியில் விஜய்.. ’காக்கா - கழுகு’ குட்டிக்கதை மூலம் பதிலடி கொடுத்தது யாருக்கு?

ஜெயலலிதா, ரஜினி ஆகியோர் சொல்லிவந்த குட்டிக்கதை பாணிகளை, பின்னாளில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் கையிலெடுத்தனர்.
ஜெ., ரஜினி, விஜய்
ஜெ., ரஜினி, விஜய்ட்விட்டர்

அரசியல் மற்றும் இதர விழாக்களில் பிரபலங்கள் பலர் குட்டிக்கதைகளைச் சொல்லி வருவது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. குட்டிக்கதைகள் சொல்வதன்மூலம் ரசிகர்களையும் தொண்டர்களையும் கவர்ந்திழுக்க முடியும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் அன்றைய கூட்டத்திற்குத் தக்கவாறு, பொதுவாக நேர்மறை சிந்தனையளிக்கும் கதைகளின் வாயிலாய்க் கருத்தை உணரவைக்கவும் முடியும். இது ஒரு ஹைலைட்டாகவே அமையும்.

இதில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, தான் பேசும் மேடைகளில், மறைமுகமாக அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்தை உணரவைக்கும் வகையில் கதைகளைக் கூறுவார். அவர், இப்படி கூறிய குட்டிக்கதைகள் ஏராளம். அவைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாகக்கூட வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், ஜெயலலிதாவுக்கு முன்பே நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், மேடை நிகழ்ச்சிகளிலும், அவர் வெளியிட்ட ’பாக்யா’ வார இதழில் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும் குட்டிக்கதைகளைச் சொல்லி, தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். பின்னர், இதே பாணியை நடிகர் ரஜினிகாந்த் கையிலெடுத்தார்.

rajinikanth
rajinikanthpt desk

தாம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆற்றும் உரைகளில் நிச்சயம் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி, அதன்மூலம் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை வழங்கி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவார். இப்படி ஜெயலலிதா, ரஜினி ஆகியோர் சொல்லிவந்த குட்டிக்கதை பாணிகளை, பின்னாளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் கையிலெடுத்தனர். தற்போது அதேவரிசையில் நடிகர் விஜய்யும் கையிலெடுத்து வருகிறார்.

இதையும் படிக்க: ’முதல்வன்’ பட பாணியில் நடிகர் அர்ஜூன் கேட்ட கேள்வி! விஜய் சொன்ன ’நச்’ பதில்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

அந்த வகையில், நேற்று (நவ.1) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். ”ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்குச் சென்றனர். காட்டுக்குச் சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் ஒருவர், வில்-அம்பு எடுத்துச் சென்றார். மற்றொருவர், ஈட்டி எடுத்துச் சென்றார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்ட்விட்டர்

வில்-அம்பு எடுத்துச்சென்றவர், முயலை வேட்டையாடினார். ஈட்டி எடுத்துச் சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு வெறுங்கையுடன் திருபினார். இதில் யார் வெற்றிபெற்றவர்? யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கைப் பெரிதாகவைத்து அதை நோக்கி நாம் செல்ல வேண்டும்” எனப் பேசினார்.

ஜெ., ரஜினி, விஜய்
“காக்கா, கழுகு எல்லாம் காட்டுல இருக்கும் தானே”- விஜய் சொன்ன குட்டி கதை! அதிர்ந்த அரங்கம்!

இந்தக் குட்டிக்கதை, நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கதைக்கு பதிலடி தந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அன்று பேசிய உரையில் நடிகர் ரஜினிகாந்த், குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். அவர், ”காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்துகொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும்போது கழுகைப் பார்த்து காகம் உயரமாகப் பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையைக்கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும். காகம் அதற்குப் போட்டியாக ஒருகட்டம் வரை வரும். ஆனால் அதனால் அதிக உயரம் பறக்க முடியாது” எனக் கூறியிருந்தார்.

rajnikanth
rajnikanthpt desk

ரஜினி கூறிய இந்தக் கதையை நெட்டிசன்கள் நடிகர் விஜய்யோடு ஒப்பிட்டுப் பேசினர். ரஜினி அளவுக்கு விஜய்யால் வரமுடியாது என்பதைத்தான், ரஜினி மறைமுகமகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. ஆம், அந்தச் சூழலில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சும் வைரலாகியது குறிப்பிடத்தகுந்தது. இதை மனதில் வைத்துத்தான் நடிகர் விஜய், தற்போது ரஜினிக்குப் பதிலடி கொடுத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், நேற்று பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ., ரஜினி, விஜய்
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி! விஜய் சொன்ன தெறி பதில்.. விசில் பறக்க விட்ட ரசிகர்கள்!

இவ்விருவர் சொன்ன குட்டிக்கதைகளையும் கேட்டால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைதான் ஞாபகத்துக்கு வருவதாக நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். அவர் சொன்ன குட்டிக்கதை இதோ. ”ஒரு ஊரில் இரு மரம் வெட்டுபவர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் கடும் உழைப்பாளிகள். அதில் ஒருவர் காலையிலிருந்து வெட்டியும் குறைவான மரங்களையே வெட்டி இருப்பார். மற்றவர் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார்.

ஆனால், அவரைவிட அதிக மரம் வெட்டியிருப்பார். காரணத்தை அறிந்ததில் அம்மரவெட்டி தொடர்ந்து கோடரிக்கு வேலை கொடுக்காமல் அவ்வப்போது இடையில் கூர் தீட்டியுள்ளது தெரியவந்தது. நாள் முழுக்க முதலாமவர் வேலை செய்ததால் முனை மழுங்கியது. எனவே, உழைத்தால் மட்டும் போதாது. புத்திசாலித்தனமாய் உழைக்க வேண்டும்” என வலியுறுத்தியிருப்பார்.

இதையும் படிக்க: ‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com