திருச்சி: பாஜக ஆதரவாளரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக புகார்: ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பாஜக ஆதரவாளரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக புகார் எழுந்ததை அடுத்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி வருண் குமார் உத்தரவிட்டார்.
Police inspector
Police inspectorpt desk

செய்தியாளர்: நிக்சன்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ரகுராமன். இவர், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீ காட்சப்பெருமாள் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்க்கும் பாஜக பிரமுகர் ஒருவரை போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் ரகுராமன் ஏற்றிச் சென்று வாக்குச் சாவடிகளை பார்வையிட்டுள்ளார்.

பாஜக பிரமுகர்
பாஜக பிரமுகர்pt desk
Police inspector
ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம் - துரை வைகோ

இதைத் தொடர்ந்து திருவெள்ளறை, தில்லாம்பட்டி, தீராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அந்த நபர், பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி வருண் குமார் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com