அரசுப் பள்ளி ஆசிரியர்pt desk
தமிழ்நாடு
திருச்சி | ஆடிப்பாடி கல்வி போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
ஆட்டம் - பாட்டத்தோடு கல்வி போத்திக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
செய்தியாளர்: எஸ்.காதர் மொய்தீன்,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுசாமி. இவர், தேவாரம் மற்றும் திருவாசத்தை ஓதி கோயில் நிகழ்வுகளில் அனைவரின் பாரட்டையும் பெற்றவர். மேலும் இவர், தோகைமலை அருகே உள்ள நாடக்காப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
அடுத்த முதல்வர் யார்? சி-ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்! விஜய்-க்கு இவ்ளோ வாய்ப்பா?
இந்நிலையில், இவர் ஆட்டத்தோடு தன்னுடைய கணீர் குரலால் பள்ளிப் பாடங்களை பாடல் போல் பாடி மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்தி அவர் சொல்வதை மாணக்கர்களும் மீண்டு சொல்கின்றனர். அழகாய் அமைதிருக்கும் அந்த நிகழ்வின் காட்சிகள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.