பிரதமர் மோடி திறந்துவைக்கும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம்.. சிறப்பம்சங்கள் என்ன?

தமிழகம் திருச்சியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.
திருச்சி விமான நிலைய புதிய முனையம்
திருச்சி விமான நிலைய புதிய முனையம்pt web

தமிழகத்தில் சென்னையை அடுத்து முக்கிய விமான நிலையமாக உள்ளது திருச்சி பன்னாட்டு விமான நிலையம். இங்கு ஆயிரத்து 112 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

இலை வடிவிலான முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரும்படி இட வசதிகள் உள்ளன. 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு - வருகை என 16 வழிகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முனையத்தை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்காத விமான நிலைய முனையமாக 4 நட்சத்திர புள்ளிகளை வாங்கியுள்ளது. கழிவு நீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பமும் இங்கு உள்ளது. அத்துடன் 3 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்தே பெற்று கொள்ள முடியும். இதன் மூலம் பசுமை விமான நிலையமாகவும் உருவெடுத்துள்ளது.

தொழில்நுட்பங்கள் ஒருபுறம் இருக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக முனையத்தின் உள்ளேயே கங்கைகொண்ட சோழபுரம், பெரியகோயில், பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்று கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் லண்டன் ஆர்க்கிடெக்சர் பாஸ்கல் வாட்சன் கைவண்ணத்தில் உருவாகியுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம், பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com