4 பேர் விபரீத முடிவு
4 பேர் விபரீத முடிவுpt desk

திருச்சி | கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபரீத முடிவு

திருச்சியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர், மேகலா தியேட்டர் எதிர்புறம் துணிக்கடை முன்பு நடத்தி வந்தார் அலெக்ஸ் (42). இவருடைய மனைவி விக்டோரியா (35) ரயில்வே ஊழியர். இவர்களுக்கு ஆராதனா (9) ஆலியா (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு தங்களது வீட்டில் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் தற்n;க்hலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Death
DeathFile Photo
4 பேர் விபரீத முடிவு
திருவள்ளூர் | ஏரியில் குளிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனது குடும்பத்தை எப்படி பாதுகாப்பது கடனை எப்படி அடைப்பது. அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com